மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
Read More »

வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?

எளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'.
தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம்.
* காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* ஏதாவது எண்ணைப் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பின்னர் நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.
* தொடர்ந்து வெந்நீர் குடித்தால் உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.
* மூக்கடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு 'ஆவி பிடித்தால்' மூக்கடைப்பு, தலைப்பாரம் அகன்றுவிடும்.
* உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும்.
* மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
* அலைந்து திரிந்ததால் பாதங்கள்வலியெடுக்கிறதா? அப்போதும் வெந்நீர் தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப்போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால் கால் வலி மறைவதோடு பாதமும் சுத்தமாகி விடும்.
* வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள் வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
* வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே 'ஜில்'லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.
* ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும்.
இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது என்றும் நன்மை தரும்.
அதேநேரம் வெந்நீரில் தினமும் குளிப்பது உடலுக்கு உகந்ததல்ல. அது எலும்புகளை பலவீனப்படுத்தலாம்.
Read More »

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்!


* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
* பித்தத்தைப் போக்கும்.
* உடலுக்குத் தென்பூட்டும்.
* இதயத்திற்கு நல்லது.
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
* கல்லீரலுக்கும் ஏற்றது.
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
* இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
*பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
Read More »

பேரிச்சம் பழம் .

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

பார்வை கோளாறு:

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பம் :

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி:
இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற்சொத்தை :

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.
Read More »

மனநோய் பதிக்கக்ப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு பெற திட்டம் வேண்டும்!

 சாலையில் நாம் அடிக்கடி காணும் காட்சி தான் மனநோய் பதிக்கக்ப்பட்டவர்கள் .தமிழ்நாடு எங்கும் இவர்களை பரவலாக காணலாம். அழுக்கு சட்டை ,கிழிந்த பெண்ட் ,பரட்டை தலை பெண்களாக இருந்தால் கிழிந்த சேலை, கிழிந்த பாவாடை ,ஜாக்கட் என்று அலக்கொலம் நீண்டுகொண்டே போகும். இவர்கள் ஒரு காலத்தில் நல்ல நிலையில் வாழ்ந்த மக்களே ! மனநலம் பாதிப்பு என்பது ஒரு வகை நோய் .இவர்களின் உறரவினர்கள் அந்த நோய்க்கு மருத்துவம் செய்யாமல்,அல்லது முழுமையாக மருத்துவம் செய்யாமல் கை விட்டுதனால் அவர்கள் வீதிக்கு வந்து விடுகின்றனர்.பின்னர் இவர்களை யாரும் கவனிப்பது கிடையாது. சாலையில்தான் இவர்களின் தாக்குமிடம்.வெயில், மழை ,குளிர் ,வெள்ளம் என்று எதுக்கும் இவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பிச்சைகாரர்கள் கூட வீடுகளில் உணவு கேட்டு பெற்று கொள்வர்.ஆனால் இவர்களுக்கு பசி எடுத்தால் கேட்க மாட்டார்கள். பெரும்பாலும் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்தான்.அல்லது குப்பை தொட்டிகளில் வீசப்படும் நாரிப்போன உணவு .குடும்பத்தினாரால் கை விடப்படும் இவர்கள் இறக்கும் வரை இதே நிலைதான் !மனிதாபமுள்ள சிலர் அமைப்புகள் மூலமாக இவர்களுக்கு உதவினாலும் அது யானைக்கு சோலப் பொறி கதைதான். இவர்கள் மறுவாழ்வு பெறவேண்டுமானால் அரசாங்கம் மனநோய் மருத்துவமனைகளை அதிகப்படுத்த வேண்டும்.மறுவாழ்வு திட்டம் ஏற்படுத்த வேண்டும்.ஆட்சியாளர்கள் இதை செய்வார்களா? -ஆக்கம் -இ .அப்துல் ஹமீது  ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'..அல் குரான் 5:32 
Read More »

டைடன் ஐ + வழங்கும் இலவச ஆன்லைன் கண் பரிசோதனை!

பிரபல கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான டைட்டன் ஐ+ கண் பரிசோதனையை இலவசமாகவே தற்போது வழங்குகிறது, இதை ஆன்லைனிலேயெ பயன்படுத்தி பார்க்க முடியும் என்பது தான் கூடுதல் ஸ்பெஷல்.

மேலும் இந்த நிறுவனம் இந்த சேவையை, தமிழ் உட்பட 7 இந்திய மொழிகளில் வழங்குகிறது. ஆங்கில மொழியறிவு இல்லாதவர்களும் கூட இதில் பங்குபெற்று பயன்பெறும் வகையில் இதனை வடிவமைத்துள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஷன் செக் என்ற இந்த ஆன்லைன் பரிசோதனைக்கு முதலில் உங்களுக்கு தேவையான மொழியினை தேர்ந்தெடுத்து, பிறகு உங்கள் பயனாளர் பெயர், இமெயில், மற்றும் பாஸ்வேர்டு இவற்றுடன் உங்கள் மொபைல் எண்ணையும் கொடுத்து பதிவுசெய்ய வேண்டும்.

அப்படி செய்த உடன் உங்கள் மொபைல் எண்ணை உறுதிப்படுத்த ஒரு குறியீட்டு எண் அனுப்பப்படும். அதை சரியாக கட்டத்தில் கொடுத்தவுடன் உங்களுக்கான 5 பக்க பரிசோதனை தொடங்கப்படும்.

இதை கண்களில் கோளாறு உள்ளவர்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. யாராக இருந்தாலும் உபயோகப்படுத்திப் பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

பரிசோதனை செய்ய இங்கே செல்லுங்கள் : http://­www.titaneyeplus.net/

நன்றி : ஜசாக்கல்லாஹு ஹைரன் அலீம் ஹுசைன்/Sangairidhvan
Read More »

பணத்தால் எனக்கு பயன் இல்லை -பில்கேட்ஸ்


பணம் என்பது மனிதர்களின் தொழிலாளியாகத்தான் இருக்கவேண்டுமே தவிர என்றைக்குமே எஜமானனாக மாறக்கூடாது என்பார்கள். இதை யார் புரிந்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். அதான் கோடி கோடியாய் பணம் இருந்தாலும் அதனால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மைக்ரோ சாப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ் லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தனக்கு சொத்து உள்ளது. ஆனாலும் அவ்வளவு பணத்தால் தனக்கு எந்த பிரயோஜமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை பொருத்த வரையில் நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுகோலுக்கு மேல் என்னிடம் பணம் இருந்து பயன் ஏதுமில்லை. போலியோவை ஒழித்தது போல், பல்வேறு நோய்களால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சுகாதார பணிகளில் சேவை செய்யும் பெண்களுக்காக என் செல்வத்தை செலவழிக்க முடிவு செய்துள்ளேன்.

1990-ம் ஆண்டில் உலகமெங்கும் 5 வயதை தாண்டாத 1 கோடியே 20 லட்சம் குழந்தைகள் நோயால் பலியாகினர். அந்த எண்ணிக்கை தற்போது 70 லட்சமாக குறைந்துள்ளது. இதேபோல் குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களை ஒழிப்பதற்காக அறக்கட்டளையின் மூலம் என் பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய விரும்புகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.

பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உலக நாடுகளில் போலியோவை ஒழிக்க கடந்த 6 ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும் பில் கேட்ஸ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Sangairidhvan
Read More »

ஜனவரி 20-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20.01.2013 மற்றும் 24.02.2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,

சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 20.01.2013 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் 24.02.2013 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கை வாழ் அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்ஸ் போலியோ நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1013 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 771 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

20.01.2013 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல் மற்றும் அரிமா சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ்நாடு 9-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது,

இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

உடல் உறுப்புக்கள் குப்பைக்கு போகும் அவலம் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னை மருத்துவமனைகளில் தானமாக பெறப்படும் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் உரியவர்களுக்கு பொருத்தப்படாமல் கழிவுகளாக குப்பையில் வீசப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் 250 இதயங்கள் வரை பெறப்பட்டபோதும், உடனடி மருத்துவ வசதியின்மை, தொலைவு, நோயாளிகளின் ஒத்துழைப்புயின்மை, தானம் தருபவர் சம்மதித்தும் உறவினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் இந்த இதயங்கள் வீணாகிப் போகின்றனவாம்.

இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றலாம் என்ற அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது. தற்போது உடல் உறுப்புதானம் பற்றி விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மூளைச் சாவு ஏற்பட்ட பலரின் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. அவ்வாறு தானமாக பெறப்படும் உறுப்புகள் தான் சில நாட்களில் பயன்படுத்தப்படாமல் கழிவாக வீசப்படுகிறதாம்.

1741 உறுப்புகள் கிடைத்துள்ளது :

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் மொத்தம் 306 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மொத்தம் 1741 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இதில் இதயம் 52, நுரையீரல் 13, கல்லீரல் 280, சிறுநீரகம் 563, இதய வால்வு 350, கண்விழி 482 மற்றும் ஒரு உடல்தானம் என்று தானங்கள் பெறப்பட்டுள்ளன. தேவையான இந்த உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்தில் மற்றொரு நோயாளிக்கு பொருத்தினால்தான் அவை பயனளிக்கும்.

வீசப்படும் இதயங்கள் :

ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளால் மொத்தம் 250 இதயங்கள் வரை பெறப்பட்டபோதும் உடனடி மருத்துவ வசதியின்மை, தொலைவு, நோயாளிகளின் ஒத்துழைப்பு இன்மை, தானம் தருபவர் சம்மதித்தும் உறவினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் தானம் பெறப்பட்ட உடல் உறுப்புகளும் குப்பைக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது.

சென்னையில் வசதியில்லை :

இந்தியாவை பொறுத்தவரை ஹைதராபாத், டெல்லி, பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன. சென்னையை பொறுத்தவரை தானமாக பெறப்படும் இதயங்களில் 17 சதவீதம் மட்டுமே மாற்றப்பட்டு மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறது. மற்ற இதயங்கள் மருத்துவ கழிவுகளாக வீசப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

ஒத்துழைப்பு இல்லை :

இதய மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரை மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாகும். நோயாளிகளின் ஒத்துழைப்பு, கட்டணம், போக்குவரத்து, தானம் அளிப்பவரின் உடல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறதா, பெறுபவரின் உடல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறதா, இரு தரப்பு உறவினர்கள் ஒத்துழைப்பு மருத்துவ வசதிகள் போன்றவைதான் இதய அறுவை சிகிச்சையை தீர்மானிக்கும்

நேரம் முக்கியம் :

பெரும்பாலும் சென்னையில் இதய பைபாஸ் மட்டுமே அதிகளவில் செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கு நிமிடம் கூட முக்கியமானது. சில உறுப்புகளை போல இதயத்தை வெகு நேரத்துக்கு வைத்திருந்து மாற்ற இயலாது. குறிப்பிட்ட மணித்துளிகளில் செய்ய வேண்டும். இல்லையேல் அது மருத்துவ கழிவுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

இவ்வாறு மேற்கண்ட பல்வேறு காரணங்களால் பெறப்படும் உடல் உறுப்புகள் குப்பைக்கு போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.Sangairidhvan
Read More »

சிறுநீரககல் பிரச்சினையும் தீர்வும் !


இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள் .இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .

அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில் பதிவு செய்கிறேன் உங்களுடைய நண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…


நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்

நன்றி : இன்று ஒரு தகவல்Sangairidhvan
Read More »

Back to Home Back to Top tntjmvl