அப்சல்
குருவை தூக்கில் போடுவதற்கு மத்திய அரசு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்
என்று தெரியவில்லை. இது தவறான நடவடிக்கையாகும்.
குறிப்பிட்ட
ஒரு இனத்த வரை மட்டும் தூக்கிலிடுவது ஏன் என்று தெரியவில்லை. இதனால்
காஷ்மீர் இளைஞர்கள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக
உணர்கிறார்கள். தங்களுக்கு உரிய நீதி கிடைக்காது என்று நினைக்கிறார்கள்.
அப்சல்
குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினருடன் சந்திக்க விடாதது
மிகவும் துரதிர்ஷ்டமாகும். அப்சல் குருவை தூக்கில் போடப்போவதாக ஸ்பீடு
போஸ்ட்டில் தகவல் அனுப்பியதாக சொல்கிறார்கள். தற்போதைய இண்டர்நெட்
யுகத்தில் இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று புரியவில்லை.
அப்சல்
குருவை தூக்கில் போடப்பட்டபோது காட்டிய வேகத்தை மற்றவர்கள் மீதும்
காட்டுவார்களா? ராஜீவ் கொலையாளிகளும், பியாந்த் சிங் கொலையாளிகளும்
உள்ளனர். அவர்களை மட்டும் தூக்கில் போடாதது ஏன்? அவர்களையும் இப்போதே
தூக்கிலிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.maalaimalar.com

