ஹைதராபாத்: “நான் பிரதமரானால் முஸ்லிம்களின்
ஓட்டுரிமையை பறிப்பேன்” என்று ஹிந்துத்துவா தீவிரவாத விஸ்வ ஹிந்து
பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளதாக ஹிந்தி பத்திரிக்கை
பட்ரிகா செய்தி வெளியிட்டுள்ளது. ஹிந்துத்துவா பயங்கரவாதியான
தொகாடியா தான் பிரதமர் ஆன இரண்டாவது நாளே முஸ்லிம்களை அனைத்து அரசு உயர்
அதிகாரப் பதவிகளில் இருந்தும் தூக்கிவிடுவேன் என்றும், முஸ்லிம்களை முதலமைச்சர், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் மற்றும்
காவல்துறை ஆணையர் போன்ற உயர் பதிகளை விட்டும் அகற்றி விடுவேன் என்றும்
கூறியுள்ளார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.