மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம்
பார்நகர் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 2
வாலிபர்கள் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். இதில்
ஒருவர் ரிதேஷ் சண்டி வாலா.
உள்ளூர் பாரதீய ஜனதா இளைஞர் அணி
நிர்வாகியாக இருக்கிறார். இவர் தனது நண்பர் மனோஜுடன் சேர்ந்து கற்பழிப்பில்
ஈடுபட்டார். பின்னர் தனது மனைவியின் சேலையை கொடுத்து உடுத்தச் சொல்லி
அனுப்பி விட்டனர். அதன்பிறகு அவள் ஜீத்து டோலி என்பவரிடம்
ஒப்படைக்கப்பட்டாள். அவரும் சிறுமியை கற்பழித்தார்.
பின்னர் சந்தீப் கோஸ்வாமி என்பவர் அந்த
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது போல் அடுத்தடுத்து 5 பேர்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பிய
சிறுமி வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி அழுதாள்.
இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார்
செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாரதீய ஜனதா
நிர்வாகி ரிதீஷ் சண்டிவாலா உள்பட 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக
இருக்கும் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
நன்றி
வெப் துனியா
வெப் துனியா