ஆயுத பூஜை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயுத பூஜை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்துத்திருமணம்-ஹைகோட்டின் புது விளக்கம்!


திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான்.

மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால்,அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான்.

திருமணம் செய்யாமல்  ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள்தான்.

-இந்திய ஹைகோட்டின் தீர்ப்பு!.

Read More »

பூஜை அறையில் காமகளியாட்டம்: 150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் இந்து சாமியார்!


கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார்.

குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது. துண்டு பிரசுரங்கள் மூலமும், டி.வி. மற்றும் ஜோதிட திலகம் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு குடும்ப பிரச்சினை தீர ஆலோசனை வழங்கி வந்தார். இதனால் அவருக்கு லட்சக்கணக்கில் பணம் குவிந்தது. இந்த நிலையில் செல்வபுரத்தை சேர்ந்த சந்திரிகா (வயது 47), பாக்கியலட்சுமி (47) ஆகிய 2 பெண்கள் குடும்பத்தில் கணவன்- மனைவி பிரச்சினையை தீர்ப்பதற்கு குறி கேட்பதற்காக சென்றனர். ஜோதிட நிலையத்தில் வி.டி.ஈஸ்வரன் அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி உள்ளார்.

பின்னர் இருவரிடமும் தனிமையில் தியானம் செய்து நான் சொல்லும் மந்திரத்தை சொன்னால் தீர்வு கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.அதன்படி சந்திரிகா, பாக்கியலட்சுமி ஆகிய 2 பேரையும் தனிதனியாக அமர வைத்து செக்ஸ் குறித்து பேசி பாலியல் உணர்வுகளை தூண்டி உள்ளார். தொடர்ந்து விளக்குகளை அணைத்துவிட்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

2 பேரும் அதற்கு இணங்க மறுத்து தப்பி வந்துவிட்டனர். இதுகுறித்து 2 பேரும் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் செல்வபுரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அதிரடியாக சென்று செக்ஸ் ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை கைது செய்தனர்.

அவரது ஜோதிட நிலையத்தில் இருந்து, 15 ஆபாச சி.டி.களையும், உணர்ச்சிகளை தூண்டக்கூடிய பாடல் காசெட்டுகளையும் போலி எந்திர தகடுகள், வசிய மை போன்றவற்றையும், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதாக வைத்திருந்த போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் கமிஷனர் சைலேந்திரபாபுவின் நேரடி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் வி.டி.ஈஸ்வரன், கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான பெண்களை மயக்கி காமகளியாட்டம் நடத்தி செக்ஸ் ஜோதிடராக வலம் வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாது:-

வி.டி.ஈஸ்வரன், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். வயிற்று பிழைப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் சித்த மருத்துவ நிலையம் தொடங்கி உள்ளார். பின்னர் தன்னை ஜோதிடர் என்ற சொல்லிக் கொண்டு குறி சொல்ல ஆரம்பித்துள்ளார்.

குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல சிலருக்கு சில விஷயங்கள் நடந்துள்ளது. உடனே அதை தனது சாதனை என்று துண்டு பிரசுரங்களாக அடித்து வினியோகித்து விளம்பரப்படுத்தி உள்ளார். அதை பார்த்து இவரிடம் குறி கேட்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ரூ. 11 கட்டணத்தில் ஆரம்பித்து ரூ. 1000-ஆக உயர்த்தி உள்ளார்.

ஜோதிடம் பார்க்க வரும் பெண்களின் மனநிலையை அவர்களிடம் பேச்சு கொடுத்து அறிவார். அவர்கள் குடும்ப தாம்பத்யத்தில் திருப்தி இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் முதல் வேளையாக அவர்களுக்கு பாலுணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டு தனது பள்ளியறைக்கு கூட்டிச் சென்று “சாமி உங்களுக்கு மன்மதன் மூலம் மகிழ்ச்சி தர போகிறார்” என்று கூறி மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஏராளமான பெண்கள் இவர் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு முறையும் ரூ. 1000 முதல் ரூ. 3 ஆயிரம் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். திருமணமான பெண்களிடம் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வார்.


இளம் பெண்களிடம் சில்மிஷத்துடன் நிறுத்திக் கொள்வார். ஒரு வேளை எல்லை மீறினால் கற்பழிப்பு வழக்கில் உள்ளே போய்விடுவோம் என்று உஷாராக இருந்துள்ளார். தன்னிடம் வந்து சென்ற பெண்கள் பற்றிய விஷயங்களையும் அவர்களிடம் வசூலித்த தொகைகளையும் டைரியில் முகவரியுடன் குறிப்பிட்டு வைத்துள்ளார்.

யார் -யாருடன் உடலுறவு வைத்தாரோ அவர்களது பெயரில் சிகப்பு நட்சத்திர குறியீட்டை அடையாளமாக குறித்துள்ளார். தினமும் வி.டி.ஈஸ்வரனை பார்க்க குறைந்த பட்சம் 6 பேர் முதல் 12 பேர் வரை வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 1500-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

இவர்களில் 1200-க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களில் சிகப்பு நட்சத்திர குறியீடு போட்டு வைத்துள்ளார். பெண்களிடம் முதலில் தன்னை ஒரு சித்தர் என்று கூறுவார். தான் ஆண்மை சக்தி மிக்கவன். நாளை என்ன நடக்கும் என்பதை அறியும் 7-வது அறிவு என்னிடம் உள்ளது என்று கூறியபடியே பெண்களின் அங்கங்களை அவர் வர்ணித்து செக்ஸ் ஆசையை தூண்டுவார்.

யாரையும் வற்புறுத்தி செக்ஸ் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டுவார். அவர்களுடன் அமர்ந்து அதை பார்த்து அவர்களின் உணர்ச்சியை மேலும் தூண்டி தனது இச்சையை தீர்த்து கொள்வார்.

எந்த பெண்களாவது இங்கு நடப்பதை வெளியில் சொன்னால் பில்லி, சூனியம் வைத்து விடுவேன் பிறகு கைகள் செயல் இழந்து ரத்தம் கக்கி செத்து விடுவீர்கள் என்று மிரட்டி உள்ளார். இதனால் யாரும் போலீசில் புகார் செய்யாமல் இருந்துள்ளனர். நாளொன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் அமெரிக்கா பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளதாகவும் கூறி கோர்ட் ஷூட் போட்டுக் கொண்டும் ஒரு சில வசதி படைத்த பெண்களிடமும் கைவரிசை காட்டி உள்ளார்.

செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். டி.வி.க்களில் வசிய ஆலோசனை வழங்குவதாக கூறியே பல பெண்களை வெளியூர்களில் இருந்து தன்னை தேடி வரவழைத்துள்ளார். அதன்படி காதலனை வசியபடுத்த மை தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் எல்லை மீறியுள்ளார்.

ஒரு சில பெண்களுக்கு அல்வாவில் கஞ்சா வைத்து கொடுத்து “செக்ஸ்” அடிமையாக வைத்துள்ளார். பொள்ளாச்சி ராணி, சேலம் குருவம்மாள், திருப்பூர் சவிதா உள்ளிட்ட 12 பெண்களை நிரந்தரமாக வைத்து செக்ஸ் அனுபவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.வி.டி.ஈஸ்வரன் தன்னுடன் தொடர்பு வைத்துள்ள பெண்களை ஆபாச படம் எடுத்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Read More »

ஆயுத பூஜை: ரோட்டில் உடைக்கும் பூசணிக்காயை அகற்றாவிட்டால் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


சென்னை, அக். 22-

நாளை ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பது வழக்கம். இதனால் ரோடுகளில் ஏராளமான பூசணிக்காய் சிதறிக்கிடக்கும். இது பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்டுத்தி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-

பெரிய மற்றும் சிறிய கடைகளில் பூசணிக்காய் மற்றும் தேங்காயை உடைத்து சாலைகளில் அப்படியே போட்டு விடுகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகிறார்கள். பொதுமக்களும் நடப்பதற்கு சிரமப்படுகிறார்கள். நாளை ஆயுத பூஜை விழாவின்போது வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைக்காரர்கள் உடைக்கும் பூசணிக்காயை அவர்களே அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். மீறி சாலைகளில் போட்டு வைத்தால் மாநகராட்சியின் மூலம் அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்களும், கடைக்காரர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கமிஷ்னர் கார்த்திகேயன் கூறினார்.thanks-maalaimalar
Read More »

அரசு அலுவலகங்களில்படங்கள் வைப்பதற்கு தடை



என் பள்ளி தமிழ் ஆசிரியரைப் பார்க்க பெரம்பூர் சென்றேன். அந்த பேருந்து நிலையத்தில், காத்திருந்த போது ஒரு பேருந்து மட்டும் இருபுறமும் வாழைமரம் கட்டி, பூக்களெல்லாம் தொங்கவிட்டு, எல்லா இடங்களிலும் பட்டை இட்டுக்கொண்டு வந்து நின்றது. ஆயுத பூஜைக்காக செய்த அலங்காரத்துடன் ஓர் அரசுப் பேருந்தினை கண்டது, ஆச்சிரியமாக இருந்தது. அதுவும் சென்னை போன்ற மாநகரில் இத்தனை படித்தவர்களின் மத்தியில் கிராமத்து மாட்டுவண்டி போல அலங்காரத்துடன் வலம் வரும் பேருந்தை எப்படி அனுமதித்தார்கள் என தெரியவில்லை. மற்ற பேருந்துகள் சிலவற்றிலும் கூட திருநீர் பட்டை அடிக்கப்பட்டிருந்தது.

ஆயுத பூஜைக்காக வாகணங்களை தூய்மை செய்து, அலங்காரப்படுத்துவது இந்துகளின் செயல். அதை எப்படி அரசே ஏற்றுநடத்தும் பேருந்து கழகத்தில் கொண்டாடினார்கள்?. பேருந்து கழகமென்ன காவல் நிலையங்களிலும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. சுகந்திர தின விழாவிற்கு ஒருநாள் விடுமுறை விட்டும், அதற்கு முதல்நாளே கொடியேற்றி விழா கொண்டாடிவிட்டு செல்லும் அரசு அலுவலங்களிலும், அரசு பள்ளிகளிலும் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் பெருங் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது என்பது வியப்புதானே.
அரசு அலுவலகங்களில் கடவுளின் படங்கள் வைப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும் அரசானை கூட பிரப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கடவுள்களின் படங்கள் இல்லாத அரசு அலுவங்களை இதுவரை நான் பார்த்தில்லை. காலாண்டரிலாவது கணபதி காட்சியளிப்பார். “ஏதோ அன்று மட்டுமாவது பேருந்தை கழுவுகின்றார்கள். அதைப் போய் ஏன் தடுப்பானேன்” என்கின்றீர்களா?. அதுவும் சரிதான். மாற்று மதத்தினர் இதனை பொருட்படுத்தாத வரை இதுபோன்ற நிகழ்வுகள் தொடராத்தான் செய்யும். சொல்வது நம் வேலை. பிரட்சனைகள் வரும் முன்பு களையவேண்டியது அரசின் வேலை
Read More »

Back to Home Back to Top tntjmvl