
நாளை ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பது வழக்கம். இதனால் ரோடுகளில் ஏராளமான பூசணிக்காய் சிதறிக்கிடக்கும். இது பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்டுத்தி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-
பெரிய மற்றும் சிறிய கடைகளில் பூசணிக்காய் மற்றும் தேங்காயை உடைத்து சாலைகளில் அப்படியே போட்டு விடுகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகிறார்கள். பொதுமக்களும் நடப்பதற்கு சிரமப்படுகிறார்கள். நாளை ஆயுத பூஜை விழாவின்போது வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைக்காரர்கள் உடைக்கும் பூசணிக்காயை அவர்களே அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். மீறி சாலைகளில் போட்டு வைத்தால் மாநகராட்சியின் மூலம் அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்களும், கடைக்காரர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கமிஷ்னர் கார்த்திகேயன் கூறினார்.thanks-maalaimalar