இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சொர்க்கவாசி

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது சொர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போது அன்சாரித் தோழர் ஒருவர் தாடியில் உளுச் செய்த தண்ணீர் வடிந்து கொண்டிருக்க, இடது கையில் இரு செருப்புக்களையும் பிடித்தவராக வருகை தந்தார். மறுநாள் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்தில் வந்தார். அதற்கு அடுத்த நாளும் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்திலேயே வருகை தந்தார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றதும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அம்மனிதரை பின் தொடர்ந்து சென்று அவரிடம், எனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினையின் காரணமாக அவரிடத்தில் மூன்று நாட்கள் தங்கமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன். எனவே அந்த நாட்களில் உங்களுடன் தங்க அனுமதியளித்தால் அதனை நான் நிறைவேற்றிவிடுவேன் என்று கூறினார். அதற்கவர் சம்மதம் தெரிவித்தார். ஒரு இரவோ, அல்லது மூன்று இரவுகளோ அவருடன் தங்கி அவரைக் கவனித்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அவரைப் பற்றிக் கூறும்போது,

அவர் இரவு தொழுகையை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. ஆனால் படுக்கையில் புரண்டு படுக்கும் போதும் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதும் தக்பீர் மற்றும் திக்ர் செய்து கொள்வார். பிறகு ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து விடுவார். மேலும் நல்லவற்றைத் தவிர வேறு எதையும் அவர் பேச நான் கேட்கவில்லை. இவ்வாறு மூன்று இரவுகள் கழிந்த பிறகு நான் அவருடைய அமல்களை மிகவும் குறைவாக மதிப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன். அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் அடிமையே! நிச்சயமாக எனக்கும் எனது தந்தைக்கும் மத்தியில் கோபத்தால் பிளவு ஏற்படும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் நிகழவில்லை. நபி (ஸல்) அவர்கள் இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று மூன்று தடவை உங்களைப் பற்றி கூறக் கேட்டேன். அந்த மூன்று தடவைகளும் நீங்கள்தான் வருகை தந்தீர்கள்! எனவே உங்களுடன் தங்கியிருந்து உங்கள் அமல்களை பார்த்து அதனைப் பின்பற்ற விரும்பினேன். நான் கண்டவரை நீங்கள் பெரிய அமல் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படியிருக்க, நபி (ஸல்) அவர்கள் உங்களைப் பற்றி இவ்வாறு கூறும் அளவிற்கு உம்மை உயர்த்தியது எது? என்று அவரிடம் கேட்டேன். அதற்கவர், நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை! என்று கூறினார். இந்நிலையில் நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். நான் சிறிது தூரம் வந்த பிறகு அவர் என்னை அழைத்து, நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை. அதனுடன், எந்த முஸ்லிமுக்கும் மோசடி செய்ய நினைக்கமாட்டேன். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி நான் பொறாமை கொள்ளவும் மாட்டேன் என்றார். அப்போது, இவைகள்தான் உம்மை அந்த அளவிற்கு உயர்த்தி விட்டது. இதனை செயல்படுத்த முடியாதவர்களாகத்தான் நாங்கள் உள்ளோம்! என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : அஹ்மத் 12236, நஸாயீ)
Read More »

உடல் தானம் செய்யலாமா?

கண், கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்குப் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.

எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகிவிடும்.

கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாகக் கொடுத்து பிறரை வாழ வைப்பதைத் தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும்.

சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.

அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்துப் பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை.

மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),
நூல்: புகாரி 2474, 5516

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். ’

உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.

'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி)

நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315

இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாகக் காணும் நிலை ஏற்படும்.

மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.
Read More »

நாட்டில் முதன்முதலாக வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கி: கேரளாவில் ரிசர்வ் வங்கி திறக்க அனுமதி

வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது.

இதையும் மீறி, காலப்போக்குக்கு ஏற்ப சிலர் பண கொடுக்கல்-வாங்கலில் வட்டியை அனுமதித்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனினும், பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்களது சேமிப்புக்கு வங்கிகள் அளிக்கும் சொற்ப வட்டியையும் பெற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.

இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளில் கோரப்படாத தொகையாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில், வட்டி என்ற நடைமுறையே இல்லாத ‘ஷரியத்’ வங்கி முறையை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் வாழும் கேரள மாநில முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை கேரள மாநில அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடம் முன் மொழிந்தது.

இதனையடுத்து, கேரள மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இன்று மும்பையில் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, ‘இஸ்லாமிய நிதி கொள்கைகளின்படி, வங்கியமைப்பை சாராத நிதி நிறுவனத்தை தொடங்க கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது’ என்று கூறினார்.

இஸ்லாமிய வங்கிமுறை கொள்கைகளின் படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. கடன் பெறுபவர்களிடமும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது.

வங்கியில் தேங்கும் பணத்தை வைத்து பங்கு வர்த்தகம், பாதுகாப்பு பத்திரங்கள், மது, புகையிலை மற்றும் சூதாட்டம் தொடர்பான தொழில்கள் தவிர இதர வகை தொழில் முனையோர் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.maalaimalar.com/2013/08/18203138/first-sharia-bank-to-open-in-k.html
Read More »

நட்பு பற்றி இஸ்லாம்



அறிமுகமாகிக் கொள்ளவேண்டும்
ஆத்மாக்கள் எல்லாம் குழுக்களாக பிரிக்கப்பட்ட படைகளாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொள்பவை இணைந்து கொள்கின்றன. அறிமுகமாகிக் கொள்ளாதவை வேறுபட்டு விடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 3088)


நட்பை வளர்த்தல்

(1) ஸலாம் கூறுதல்

என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவர்களாக முடியாது. உங்களிடையே நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்!

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 81)

உறவினர்களாக இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறவேண்டும்.


(2) அன்பைத் தெரிவித்தல்
நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார்.

அறிவிப்பர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல் : அஹ்மது 11980


(3) சந்தித்தல்

ஒரு மனிதர் இன்னொரு ஊரிலிருந்த தன் சகோதரரை சந்திக்கச் சென்றார். அவர் செல்லும் வழியில் அல்லாஹுதஆலா ஒரு மலக்கை எதிர்பார்த்திருக்கும்படிச் செய்தான். அம்மனிதர் அந்த மலக்கு அருகில் வந்த போது, அம்மலக்கு அவரிடம் எங்கு செல்கிறீர்? என்று கேட்டார். அதற்கவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரை நாடிச் செல்கிறேன் என்றார். அப்போது அந்த மலக்கு அந்தச் சகோதரர் உமக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டியதிருக்கிறதா? (அதற்காக அவரிடம் செய்கிறாயா?) என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்றார். அப்போது அந்த மலக்கு, அல்லாஹ்வுக்காக நீர் அவரை நேசித்தது போல் அல்லாஹ் உன்னை நேசிக்கிறான் என்பதை உனக்கு தெரிவிக்க வந்த அல்லாஹ்வின் தூதர்தான் நான் என்று கூறினார்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 4656)

இந்த ஹதீஸில் கிடைக்கும் செய்திகள்:

1) நல்ல நட்பு என்பது உலக லாபத்திற்காக இல்லாமல் அல்லாஹ்வுக்காக என இருப்பது.
2) நட்புக் கொண்டவர்களிடையே சந்திப்புகள் நடக்க வேண்டும்
3) ஒருவர் மீது தூய்மையான அன்பு கொண்டால் அதற்காக அல்லாஹ்வும் நம்மீது அன்பு கொள்கிறான்.

நட்பின் கடமைகள்

(அ) உதவி செய்தல்
உலக இலாபத்திற்காக நட்புக் கொள்வது முறையல்ல என்றாலும் தேவைகள் நெருக்கடிகள் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் உதவிகள், ஒத்துழைப்புகள் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 2262, முஸ்லிம்)

பொதுவாக அனைத்து முஸ்லிம்களிடமும் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனும் போது நமக்கு நெருக்கமானவர்கள் என்றால் இந்த கடமைகளின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது.


(ஆ) நல்வழிப்படுத்துதல்

இந்த வசனத்தில் முஃமின்கள் தங்களுக்குள் நன்மையை எடுத்துச் சொல்லி தீமையை தடுக்க வேண்டியது கடமை என குறிப்பிடப்படுகிறது.

18:32 தொடர் வசனங்களில் உலக வாழ்வில் மயங்கி அல்லாஹ்வை மறந்த தன் நண்பனுக்கு ஒரு நல்ல நண்பன் செய்த உபதேசத்தை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான்.

உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும் அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள் என்றார். அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும் அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 6438)

அநியாயம் செய்வது தன் நண்பன் என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருப்பது நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல. மேலும் தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால் அது ஒருபெரிய பாவமாகிவிடும்.

உற்ற நேசர்களெல்லாம் அன்றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாயிருப்பர் – இறையச்சமுள்ளவர்களைத் தவிர (43:67)

நண்பர்களின் தீமைக்கு துணைபோனவர்கள் எல்லாம் ‘உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்’ என்று ஒருவரை ஒருவர் பழித்து எதிரிகளாகிவிடுவர்.


தீய நட்பை முறிக்க வேண்டும்

திருத்தினாலும் திருந்தாத தீய நண்பனிடமிருந்து விலகிக் கொள்ளவேண்டும்.

ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4193, திர்மிதி 2300)


தூய நட்புக்கான கூலி

அல்லாஹுதஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்காக நேசிக்கக் கூடியவர்களுக்கு ஒளியினால் ஆன மின்பர்கள் (மேடைகள்) இருக்கும். அவர்கள் நிலையை நபிமார்களும் ஷுஹதாக்களும் கூட விரும்புவார்கள்.

(அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், நூல்: திர்மிதி 2312)


நல்லோரை நேசிப்போம்!

நமக்கு முன் சென்ற நல்லோர்களையும் நமது சமகால நல்லோர்களையும் நமக்கு பின் தோன்றும் நல்லோர்களையும் நேசிக்குமாறும் அவர்களுக்காக துஆச் செய்யுமாறும் பாவமன்னிப்புத் தேடுமாறும் மார்க்கம் அறிவுறுத்துகிறது. மேலும் இம்முக்காலத்து நல்லோர்களுடன் சொர்க்கத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆசையைப்படவும் அதற்காக செயல்படவும் மார்க்கம் வலியுறுத்துகிறது.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்னும் (இவ்வுலகிற்கு) வந்தடையாத ஒரு சமுதாயத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்! இதுபற்றி கூறுங்களேன்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 5703)

அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார், ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை, இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்து நான் கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4462)
Read More »

இந்த நடிப்பு யாருக்காக?

தூய்மையான இஸ்லாமிய தஃவா(அழைப்பு) களத்தில் இது போன்ற காரியங்கள் தேவைதானா?

நம்மை படைத்த இறைவன் இப்படிப்பட்ட ஆடம்பரங்களை ஒருபோதும் விரும்ப மாட்டான்......

குரானை கரைத்து குடித்து இருந்தாலும், அதன் அடிப்படை நோக்கம் இவர் அறிய மாட்டாரா?????

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.

QURAN (16:23)
Read More »

புறம் பேசுதல்


முஸ்லிம்கள் ஒன்றுகூடும் சபையில் புறம் பேசுவது, பிறரை இழிந்துரைப்பது போன்ற செயல்கள் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உள்ளங்கள் வெறுக்கும் அறுவருப்பான உவமையைக் கூறி இதனை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
68:11. (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.


104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.



புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)

நம்முடைய முஸ்லிம் சகோதரர் வெறுப்பதை நாம் கூறுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!

அல்லாஹ்விடத்தில் மிகக்கேவலமான, இழிவாகக் கருத்தப்படும் புறம் பேசுதல் விஷயத்தில் மக்கள் மிகப் கவனக்குறைவாக உள்ளனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி ஒருவன் தனது சகோதரனின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும். (அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜைத்(ரலி) நூல்: அபூதாவூத்)


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: அஹமத்)





நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
Read More »

சிரிப்பு- இஸ்லாமியபார்வை!




மனிதனுக்குள் இறைவன் ஏற்படுத்தியுள்ள பண்புகளில் சிரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இரக்கம் கோபம் வெட்கம் பயம் போன்ற எத்தனையோ குணங்கள் மனிதன் குறிப்பிட்டப் பருவத்தை அடைந்தப் பிறகு தான் தோன்றுகின்றன. ஆனால் சிரிப்பைப் பொறுத்தவரை மனிதன் பிறந்த உடனே இத்தன்மை குழந்தைக்கு தொற்றிக்கொள்கிறது. பிறத்தல் மரணித்தல் அழுதல் போன்ற பண்புகல் இயற்கையாகவே மனிதனிடத்தில் குடிகொண்டிருப்பதைப் போல் சிரிப்பும் மனிதனுடன் பிண்ணிப்பிணைந்துள்ளது.



இந்தத் தன்மையை இறைவன் மனிதனுக்கு மாத்திரதம் பிரத்யேகமாக வழங்கியுள்ளான். மனிதனைத் தவிர்த்து ஆடு மாடு யானை பூனை போன்ற ஏனைய உயிரினங்கள் சிரித்து நாம் பார்த்ததில்லை. எனவே தான் மனிதனுக்கு வரைவிலக்கணம் சொல்லும் போது சிரிக்கும் உயிரினம் என்று விளக்கம் கொடுப்பார்கள்.


வாழ்வில் சிரமங்களையும் துயரங்களையும் சந்திக்கும் மனிதன் சிரிப்பின் மூலம் இவைகளை எளிதில் மறந்துவிடுகிறான். அவனது மனதிற்கு சிரிப்பு பிணி நீக்கும் சிரப்பாக திகழ்கிறது. எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் செல்லும் இடமெல்லாம் நண்பர்களையும் அன்பர்களையும் சம்பாரித்துக்கொள்கிறார்கள்.


இவர்களுடைய மகிழ்ச்சி இவர்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் பிறரையும் மகிழ்விக்க உதவுவதால் இவர்களைக் கண்டாலே மக்களுக்கு குதூகலம் வந்துவிடுகிறது. ஏனென்றால் சிரிப்பு என்பது ஒரு தொற்று நோயைப் போல். ஒரு சபையே சிரிப்பதற்கு ஒருவரது சிரிப்பு காரணமாகிவிடுகிறது.


சிரிப்பு என்பது ஆண்மீகத்திற்கு எதிரி என்று கணிசமான மக்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள். முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு கடவுளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவர் பக்திமான் என்று போற்றப்படுகிறார். மரத்தடியில் வாழும் முனிவர்களும் சிரிக்காத புரோகிதர்களும் ஆண்மீகத்தில் முதிர்ச்சி பெற்றவர்கள் என்று மக்கள் கருதிவிடுகின்றனர்.


இவர்கள் சிரிப்பை முழுவதுமாக ஓரங்கட்டிவிடுவதினால் ஆண்மீகத்திற்கு எதிராக பலர் கிளம்பிவிடுகிறார்கள். ஆண்மீகம் என்பது பொய். வாழ்க்கை என்பது மகிழ்வதற்காகத் தான் எனவே எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று புலம்பிக்கொண்டு மனம்போன போக்கில் செல்லக்கூடியவர்களும் உண்டு.


எல்லாப் பிரச்சனைகளையும் நடுநிலையோடு சீர்தூக்கிப்பார்த்து வழிகளை காட்டும் நம் இஸ்லாமிய மாôக்கம் நம்முடன் கலந்துவிட்ட இந்த சிரிப்பைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ள இருக்கிறறோம்.


இஸ்லாத்தின் பார்வையில் சிரிப்பு


சிரிக்கும் தன்மையை மனிதனுக்கு இறைவன் தான் ஏற்படுத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. சிரிப்பது ஒரு மோசமான செயல் என்றால் அத்தன்மையை ஏற்படுத்தியவன் நான் தான் என்று இறைவன் தன்னை புகழ்ந்து கூறியிருக்கமாட்டான்.


அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.
அல்குர்ஆன் (53 : 43)


மறுமை நாளில் நல்லவர்களுக்கு இறைவன் அளிக்கும் பாக்கியங்களில் ஒன்று சிரிப்பாகும். அந்நாளில் கெட்டவர்களின் முகங்கள் கடுகடுவென சுருங்கிய நிலையில் இருக்கும். இவர்களுக்கு சிரிப்பு என்ற பாக்கியத்தை இறைவன் தடுத்துவிட்டான். சொர்க்கவாசிகள் சுவனத்தில் அடையும் இந்த இன்பத்தை இந்த உலகத்தில் நாம் ஏன் தவறவிட வேண்டும்?


அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.
அல்குர்ஆன் (80 : 32)


அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.
அல்குர்ஆன் (75 : 22)


இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் எறும்பு பேசியதைக் கேட்டு சிரித்ததாக குர்ஆன் கூறுகிறது.


அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ''எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். ''என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!'' என்றார்.
அல்குர்ஆன் (27 18)


பிறரை சந்திக்கும் போது மலர்ந்த முகத்துடன் இருப்பதும் நல்லகாரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பது உட்பட எந்த ஒரு நல்லகாரியத்தையும் அற்பமாக நினைத்துவிடாதே.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி­)
நூல் : முஸ்­ம் (4760)


சிரிப்பு ஆண்மீகத்திற்கு எதிரல்ல


இஸ்லாமிய மார்க்கத்தை கடைபிடிப்பதிலும் இறைவனுக்கு பயந்து நடப்பதிலும் நபி (ஸல்) அவர்களை யாராலும் மிஞ்சிவிட முடியாது. உன்னதமான ஆண்மீகத் தலைவராகத் திகழ்ந்த நபி (ஸல்) அவர்கள் சிரித்த முகத்துடனே வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள். முழு மனிதத்தன்மையை அடையாதவர்கள் தான் சிரிக்கமாட்டார்கள். பிறரிடம் சிரித்து மகிழ்ந்து பேசாதவன் மனிதத் தன்மையிலும் ஆண்மீகத்திலும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.

நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளி­ருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி­)
நூல் : முஸ்­ம் (4522)


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் நபியவர்களுக்கு சிரிப்பூட்டிக்கொண்டே இருந்துள்ளார். சிரிப்பூட்டியதற்காக இவரை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் கழுதை என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார்.
அறிவிப்பவர் : உமர் (ர­லி)
நூல் : புகாரி (6780)


பள்ளிவாச­ல் நபித்தோழர்கள் சிரித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இவர்களுடன் சோந்து நபி (ஸல்) அவர்களும் சிரிப்பார்களாம்.
சிமாக் பின் ஹர்ப் அவர்கள் கூறியதாவது : நான் ஜாபிர் பின் சமுரா (ர­) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்க அவர்கள் ஆம் அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்தி­ருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக்காலம் குறித்து பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.
அறிவிப்பவர் : சிமாக் பின் ஹர்ப் (ரஹ்)
நூல் : முஸ்­லிம் (1188)


எப்போதும் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைத்துக் கொண்டு மறுமை சிந்தனையில் மாத்திரம் தான் இருக்க வேண்டும் என்று ஹன்ளலா (ர­) அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்களால் அவ்வாறு இருக்க முடியவில்லை. வீட்டுக்குச் சென்றால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக மகிழ்ந்து விளையாடுவார்கள். எனவே இதைப் பற்றி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது சந்தோஷமாக இருப்பது மனித இயல்பு. இது தவறல்ல என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுரைக் கூறினார்கள்.
ஹன்ளலா (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள் அபூபக்கர் (ர­) அவர்கள் என்னை சந்தித்து ஹன்ளலாவே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான் ஹன்ளலா நயவஞ்சகராக ஆகிவிட்டார் என்று கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இருக்கும் போது அவர்கள் நமக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் கண்கூடாக (அவற்றை) நாம் காண்வதைப் போல் (மார்க்க சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்டால் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் விளையாடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்துவிடுகிறோம் என்று கூறினேன். அபூபக்கர் (ர­) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாமும் இப்படித் தான் இருக்கிறோம் என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ர­) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். நான் அல்லாஹ்வின் தூதரே ஹன்ளலா நயவஞ்சகனாகிவிட்டான் என்று கூறினேன். அதற்கு அவர்கள் என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில் உங்களிடத்தில் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டால் மனைவிமக்களுடன் விளையாட ஆரம்பித்துவிடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்துவிடுகிறோம் என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடத்தில் நீங்கள் இருப்பதைப் போன்றும் இறைதியானத்திலும் நீங்கள் எப்போது திளைத்திருந்தால் வானவர்கள் (போட்டி போட்டுக்கொண்டு) நீங்கள் உறங்கச் செல்லும் இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடத்தில் கை கொடுப்பார்கள். எனவே ஹன்ளலாவே சிறிது நேரம் (மார்க்க விசயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்) என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹன்ளலா (ர­லி)
நூல் : முஸ்­லிம் (4937)


சிரிப்பூட்டும் சில நிகழ்வுகள்


நபியவர்களை சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. வாய்விட்டு சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய்விட்டு சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்துகொள்ளலாம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்கள்.
சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்துகொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர் ஆம் (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன் எடுத்துக்கொள் ஆதமின் மகனே உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்
(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி அல்லாஹ்வின் மீதாணையாக அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி)
நூல் : புகாரி (2348)


(நரகத்தி­ருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தை தாக்கி கரித்துவிடும்.


இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறைவன் சுபிட்டமிக்கவன். முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான் என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர் என் இறைவா அந்த மரத்தின் அருகே என்னை கொண்டு செல்வாயாக. அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்.


அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் மனிதா அதை உனக்கு நான் வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா? என்று கூறுவான். அதற்கு அவர் இல்லை இறைவா வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன் அவருக்கு வாய்ப்பளித்து அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார். அதன் நீரையும் பருகிக்கொள்வார்.


பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முத­ல் காட்டப்பட்ட மரத்தை விட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட உடன்) அவர் என் இறைவா இதற்கருகே என்னை கொண்டுசெல்வாயாக. நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துகொள்வேன். இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறுவார். மனிதா வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டு சென்றால் வேறொன்றை நீ கேட்ககூடுமல்லவா? என்பான். உடனே அவர் வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார்.


இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு வாய்ப்பளித்து அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக்கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.
பிறகு சொர்க்கவாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முத­ரண்டு மரங்களை விடவும் ரம்யமானதாக இருக்கும். உடனே அவர் என் இறைவா அந்த மரத்தின் அருகே என்னை கொண்டுசெல்வாயாக. நான் அதன் நிழலைப் பெறுவேன். அதன் நீரைப் பருகிக்கொள்வேன் என்று கூறுவார். இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறுவார். அதற்கு இறைவன் மனிதா வேறெதையும் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் வாக்குறுதி அளிக்கவில்லையா? என்று கேட்பான். ஆம் என் இறைவா இந்தத் தடவை (மட்டும்).


இனி இதன்றி வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து அதன் அருகே அவரைக் கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும் போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர் என் இறைவா சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக என்று கேட்பார். அதற்கு இறைவன் மனிதா ஏன் என்னிடம் கேட்பதை நீ நிறுத்திக்கொண்டாய்?


உலகத்தையும் அது போன்று இன்னொன்றையும் நான் உனக்கு வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே? என்று கேட்பான். அதற்கு அவர் என் இறைவா அகிலத்தின் அதிபதியே நீ என்னை பரிகாசம் செய்கிறாயா? என்று கேட்பார்.


(இதை அறிவித்த போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி) அவர்கள் இவ்வாறு தான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அதற்கு நபித்தோழர்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என்று அந்த மனிதர் கூறும் போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்). மேலும் நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான் என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி)
நூல் : முஸ்­லிம் (310)


நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் அழிந்துவிட்டேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்புவைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன் என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இருமாதம் நோன்பு நோற்க சக்தி இருக்கிறதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த (அரக்) என்னும் அளவைக் கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான் என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட என் பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக்கொடுத்து விடுவீராக என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­)
நூல் : புகாரி (1936)


நகைச்சுவையுடன் நபிகள் நாயகம்


பிறர் நகைச்சுவையுடன் பேசும் போது அதை நபி (ஸல்) அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள். பல நேரங்களில் பிறரிடத்தில் அவர்களும் நகைச்சுவையுடன் பேசியும் இருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களி­ருந்து இதை உணர்ந்துகொள்ளலாம்.




அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு


சிரிப்பதை அனுமதிக்கும் நம் மார்க்கம் அதை அளவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. சிரிக்கக்கூடாத இடங்களில் சிரிப்பதை தடைசெய்கிறது. சிரிக்கத் தகுதியற்ற இடங்களில் சிரிப்பது என்பது தேவையற்றது. சிரிப்பு வராவிட்டாலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வேண்டுமேன்றே சிரிப்பதை போல் சிலர் காட்டிக்கொள்கிறார்கள்.
கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் நிலமைபுரியாமல் சிரிப்பவர்களும் உண்டு. பொறுத்தமற்ற இந்த சிரிப்புகள் பிறரை மகிழ்விப்பதற்கு பதிலாக கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்திவிடும். பிறர் துன்பப்படும் போது அதைப் பார்த்து கே­செய்து சிரித்தால் அதன் மூலம் பலர் பரவசம் அடைந்தாலும் சிலர் புண்படுகிறார்கள். இத்தகைய சிரிப்புகள் அனுமதிக்கப்பட்டவை அல்ல.


நாம் சொல்லும் நகைச்சுவையினால் எப்போது எல்லோரும் மகிழ்கிறார்களோ அப்போதே நாம் சரியான அடிப்படையில் பிறரை சிரிக்கவைத்திருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நம் உள்ளத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மனதில் இறுக்கத்தையும் மூளைக்குத் திரையையும் சிரிப்பு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் அதிகமாக சிரிப்பதை தடைசெய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி)
நூல் : இப்னுமாஜா (4183)




விபத்துக்கள் அழிவுகள் தொடர்பாக செய்திகள் கிடைத்தால் மரணத்திற்கு பயப்பட வேண்டுமேத் தவிர சிரித்து கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கக்கூடாது. மண்ணறைகளை கடந்து செல்லும் போது மரணபயத்துடன் செல்ல வேண்டும். இடி மின்னல் போன்ற இயற்கை சீற்றங்கள் தலைதூக்கும் போது இறைவனின் பயம் வர வேண்டும்.
ஏனென்றால் மழையின் அறிகுறியாக தோன்றும் இடி பல உயிர்களை கொன்றுவிடுகிறது. தேவைக்கு அதிகமாக மழை பெய்துவிட்டாலும் அதிகமாக உயிர்சேதமும் ஏற்படுகிறது. கட்டிடங்கள் வலுவிழந்து வசிப்பவர்களுக்கு மண்ணறைகளாக மாறிவிடுகின்றது. ஆகையால் தான் நபி (ஸல்) அவர்கள் கடும் காற்றையோ மேகம் திரள்வதையோ கண்டால் படபடப்புடனும் பரபரப்புடனும் காணப்பட்டார்கள்.


மேகத்தையோ அல்லது (சூராவளிக்) காற்றையோ கண்டால் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதரே மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தாங்கள் மேகத்தை காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக்காணுகின்றேனே (ஏன்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆயிஷாவே அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு இது நமக்கு மழையை பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி)
நூல் : புகாரி (4829)




பொய் சொல்­ சிரிக்கவைக்கக் கூடாது

பிறரை சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாக சொல்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று. நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக்கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாக பரவியிருக்கிறது.

சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் பெரும்பாலான நகைச்சுவைக் கருத்துக்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. நகைச்சுவையிலும் உண்மையைத் தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் பணிக்கிறது. சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்வதை தடைசெய்துள்ளது.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி)
நூல் : திர்மிதி (1913)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் (பிற) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ர­லி)
நூல் : திர்மிதி (2237)


பிறரை பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக்கூடாது



மற்றவர்களை பயமுறுத்தியோ ஏமாற்றியோ கே­ செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும்.
அறிவிப்பவர் : யசீத் பின் சயீத் (ர­லி)
நூல் : அஹ்மத் (17261)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சிலர் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்­மை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்­முக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்)
நூல் : (ரஹ்) அஹ்மத் (21986)

masjudulhaq.com
Read More »

உண்மையான நண்பன்!

உண்மையான நண்பன் என்பவன் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவன் மட்டும் அல்ல. குறைகளை தயங்காமல் சுட்டி காட்டுபனாகவும், தவறுகளை தட்டிக் கேட்பவனாகவும் இருக்க வேண்டும்.
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும் அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள் என்றார். 'அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும் அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 6438)
Read More »

பழி சுமத்தும் இழி செயல்

மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் அன்பு காட்டி பார்க்கின்றனர். அதற்கு அடிபணிய வில்லையானால் ஆசை காட்டி பார்க்கின்றனர். அதற்கும் மசியவில்லையானால் குற்றம் குறை ஏதும் இருக்கின்றதா? என்று பார்க்கின்றனர். இருந்து விட்டால் அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அரட்டி மிரட்டி அடி பணிய வைக்கின்றர். இதிலும் தோல்வி அடைந்துவிட்டால் பழி சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டு அடக்க முயல்கின்றனர்.
இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஏழை மனிதர்கள் யார் என வினவினார்கள் (அதற்கு தோழர்கள்) எங்களில் பொருள் வசதி இல்லாதவர்தான் ஏழை மனிதர் என பதிலளித்தார்கள்; அது சமயம் நபி (ஸல்) அவர்கள் கியாமத் என்னும் இறுதி நாளில் (நீங்கள் கூறிய நபர் அல்ல) அந்நாளில் ஏழை மனிதர் உலகிலிருந்து தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளையும் கொண்டு வருவார். அத்துடன் அவர் எவரையாவது திட்டியிருப்பார். எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார். எவருடைய பொருளையாவது சாப்பிட்டிருப்பார். எவரையாவது அநியாயமாக கொன்றிருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார்.
ஆக இத்தகு குற்றங்களையும் கொண்டு வருவார். பின்பு இவருடைய நன்மைகளிலிருந்து (இவரால்) அநீதம் இழைக்கப்பட்டவருக்கு (நன்மை) வழங்கப்படும்; (இவரால்) மற்றொரு அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும். (இப்படியே) இவருடைய நன்மைகள் எல்லாம் முடிந்துவிடும். (ஆனால்) மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மீதமிருக்கும்; (ஆகவே) அம்மக்களின் குற்றங்களை அவர் மீது சுமத்தப்படும்; பின்பு அவரை நரகில் போடப்படும். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
தப்பெண்ணம் கொண்டு பழி சுமத்தும் இழி செயல் தான் நபித்தோழர்களையும், நபி உறவினர்களையும் ஷஹீதாக்கப்பட தூண்டுகோலாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. எவனாவது எவனுடைய குறையையேனும் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து தக்க ஆதராமின்றி அவதூறு கூறுவானோ, வீண் பழி சுமத்துவானோ அவனது அந்தரங்க குறைகளை அல்லாஹ் அவனுடைய வீட்டிலேயே வைத்தே வெளிப்படுத்தி விடுவான்.
அவரவர் தத்தமது குறைகளைத் தேடித் திருத்தி கொள்பவரே அறிவாளி; அடுத்தவர் குறை தேடி பழி சுமத்துபவர் அறிவிளி.  பிறர் மீது பழி சுமத்தும் இழி செயலை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக!
Read More »

*** அச்சுறுத்த வரும் தஜ்ஜால் பற்றிய வர்ணனை ****

##############################

பெயர் ; தஜ்ஜால்

புனைப்பெயர் ; மஸீஹ் தஜ்ஜால்

குடும்பம் ; குழந்தை பிறக்காத மலடன்

தோன்றும் காலம் ; இறுதி நாளின் சமீபம்

தோன்றும் இடம் ;மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா

நாடுக்களுக்கிடையே உள்ள "குரஸான்"
(ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில்

அவனது இனம் ; யூத இனம்

வாழும் காலத்தின் அளவு ; நாற்பது நாட்கள் விளக்கம் ; அவன் வாழும் நாற்பது
நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்,
இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,
மற்றொரு நாள் ஒரு வாரம் போன்றும்
இருக்கும்.மீதமுள்ள நாட்கள் சாதாரண
நாட்களைப் போன்றும் இருக்கும் .

அவனது தோற்றம் ;

1. திடகாத்திரமான இளைஞன்,
சிவப்பானவன் .

2. மரக்கிளை போன்று அடர்த்தியான
சுருட்டை முடி உடையவன் .

3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண்
நிலை குத்திய நிலையில் பச்சை நிறக்
கண்ணாடி போன்று பார்வை உடையவன் .

4. குட்டையானவன், குண்டானவன் .

5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்
கொண்டவன்.

6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்
அவன் பிரவேசிக்கும் இடம் ; மக்கா, மதீனா ஆகிய இடங்களைத் தவிர
உலகின் அனைத்து பகுதிகளும்

அவனது அதிசய வித்தைகள் ;

1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .

2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும்
வைத்திருப்பான் .

3. மலை போன்ற ரொட்டிகளை (உணவுப்
பொருட்களை) வைத்திருப்பான்.

4. மழை பொழிய வைப்பான்.

5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட
நோய்களை குணப்படுத்துவான்.

6.ஒருவனை ஒரு முறை மட்டும் கொன்று விட்டு
மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய
இயலாது)

7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்
கொழுக்க வைப்பான்.

8. பூமியில் புதையல் உள்ள இடங்களை
அறிந்திருப்பான்.

அவனது கொள்கை ;

தானே இறைவன் என வாதிட்டு,
மக்களை ஈமான் கொள்ளச் செய்வது.

அவனது மரணம் ;

இஸ்ரேலின் தலைநகரான டெல்
அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து
என்னும் இடத்தில் வைத்து மர்யம்
(அலை) அவர்களின் மகன் ஈஸா நபி
அவர்கள் அவனைக் கொள்வார்கள்
************************************************
Read More »

உங்கள் உறவினர்கள் உங்களுக்கு அநீதி இழைக்கிறார்களா ?

ஒருவர் நபி ( ஸல் ) அவர்களிடம் , " இறைத்தூதர் அவர்களே ! எனக்கு சில உறவினர் உண்டு அவர்களை நான் இணைந்து வாழ்கிறேன். ஆனால் அவர்கள் என்னை ஒதுக்குகிறார்கள்.அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு தீமை செய்கிறார்கள் . அவர்களிடம் நான் கனிவுடன் நடக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை
கண்டுகொள்வதில்லை "என்று கூறினார்.

நீர் கூறுவது போல் நீர் இருந்தால் அவர்களை நீர் சுடுசாம்பலை உண்ண செய்தது போலாகும் .  நீர் இதே நிலையில் இருக்கும் வரை
அல்லாஹ்விடமிருந்து உதவியாளர் ஒருவர்  உம்முடன் இருப்பார் " என்று நபி ( ஸல் ) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 2558
Read More »

பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது - ஷபீகுர் ரஹ்மான்!

கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!


நேற்று முன்தினம் (08/05) நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது, கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான் எம்பி., அதற்காக "மன்னிப்பு" கேட்க முடியாது என்றார்.


"வந்தே மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தமைக்காக "மன்னிப்பு" கேட்க வேண்டும், என்ற சபாநாயகர் மீரா குமாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஷபீகுர் ரஹ்மானுக்கு, தற்போது கட்சித் தலைமையின் மூலம் நெருக்குதல் தரப்பட்டு வருகிறது.


இறைவனைத்தவிர எவரையும் - எப்பொருளையும் வணங்கக் கூடாது, என்ற கொள்கை உறுதி கொண்ட இஸ்லாமியர்கள் "மண்ணை வணங்க" வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலை, ஒரு போதும் பாட முடியாது என்பதுடன், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்கவும் முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்.


தேசிய கீதம் என்பது வேறு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகம் கொண்ட "வந்தே மாதரம்" பாடல் வேறு என்றார், அவர்.

செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ஷபீக், இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அவர், சபாநாயகர் மட்டுமல்ல கட்சித்தலைமை சொன்னாலும், என் உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் என்றார்.


எனினும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் தாம் வெளி நடப்பு செய்யவில்லை, எனக்கூறிய அவர், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருக்கும் தான், "வந்தே மாதரம்" பாடல் நிகழ்ச்சிக்கு, முன் கூட்டியே வெளியில் சென்று விடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்த போதும், தவிர்க்க முடியாமல் இப்படி ஆகி விடுகிறது,என்றார்.

கடந்த 1997ம் ஆண்டிலும், நாடாளுமன்றத்தை விட்டு தாம் வெளி நடப்பு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான் பர்க்.
Read More »

ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. அல் குர்ஆன் 86 :4

மனிதன் இவ்வுலகில்  தான் முக்கியமாக கருதும் அனைத்தையும் எழுதி வைக்கும் பழக்கம் அவனிடத்தில் இருந்தது. தான் பேசும் மொழியை எழுதி வைத்து மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தான். நிலங்கள் மற்றும் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதை ஆரம்ப காலத்தில் கற்களிலும் பின் தோல்களிலும் பிறகு பேப்பரிலும் எழுதிவைத்தார்கள். இவ்வாறு ஒவ்வொன்றையும் பதிவு செய்யும் பழக்கம் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துவிட்ட இக்காலத்தில் எல்லா விஷயங்களும் மிக இலகுவாக கம்யூட்டர் மூலம் மற்றும் சிப்பிலும் (ஸ்ரீட்ண்ல்) லும் பதியப்படுகின்றன . அதிலும் குறிப்பாக குற்றச்செயல்கள் புரிபவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு பதியப்படுகிறது. இதை கொண்டு குற்றம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். இது இவ்வுலகில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கண்காணிக்கும் வழிமுறைகளாகும்! 
ஆனால் (முஸ்லிம்களுக்கு) இறைவன் மனிதன் செய்யும் அனைத்தையும் பதிவு செய்ய ஒரு இனத்தையே படைத்துள்ளான்.
அவர்கள் மலக்குமார்கள் எனும் வானவர்கள் ஆவர் .


நன்மை தீமைகளை பதிவாக்குதல்:
அல்லாஹ்வை வணங்குவது மட்டுமல்லாமல் மனிதனோடு தொடர்புள்ள பல பொருப்புகளை வானவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அதிலே மனிதர்களை கண்கானித்து நன்மை தீமைகளை பதிவு செய்வதும் ஒன்றாகும்.
ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.
அல் குர்ஆன் 86 :4

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.
அல்குர்ஆன் 50:17,18

அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.
(அல் குர்ஆன் 43 : 80)

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.
(அல் குர்ஆன் 82 :10, 11 ,12)

இல்லிய்யீன் ஸிஜ்ஜீன்:
இவ்வாறு மனிதனின் செயல்கள் உலகில் வாழும்போது ஒன்றுவிடாமல் வானவர்களால் பதியப்படுகின்றது . இப்படி அவனுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் கணக்கெடுத்து இவன் நல்லவனா? கெட்டவனா? என்று இறந்த பின் மீண்டும் ஒரு முறை வானத்திற்கு அவனுடைய ரூஹ் எடுத்துச் செல்லப்பட்டு பதிவாகிறது.

இதோ அதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: .
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளரிக்கொண்டிருந்தார்கள் .எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்த கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம் .(திடீரென) நபி (ஸல்) அவர்கள் தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையி-லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத்தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் (சக்கராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள் இவர்கள் தங்களது சுவர்க்கத்துக்கு கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும் சுவர்க்கத்தின் நறுமணத்திலிருந்து நறுமணத்தையும் வைத்து கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரை கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி நல்ல ஆத்மாவே! ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உடலிலிருந்து வெளியேறி விடு என கூறுவார். தோல்பையி-லிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விழுவது போல அந்த (ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும் . அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல் அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள். (பின்பு அந்த உயிரை) அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை திறக்கும் படி அவ்வானவர் கூறுவார். வானம் திறக்கப்படும். இப்படி ஏழு வானம் திறக்கப்படும். அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்லியீனிலே பதிவு செய்யுங்கள், அந்த ஆத்மாவை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான். (ஹதீஸ் சுருக்கம், நூல் : அஹ்மத் 17803)

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்துவிடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப் பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஒட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல் அவனுடைய உடலிலிருந்து உயிர் கைப்பற்றப்டும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்க மாட்டார். உடனே கம்பளிதுணியில் வைத்துவிடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத் திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமாக துர்நாற்றம் அதிலி-ருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்டார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும் படி அவ்வானவர்
கேட்பார். அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஒதிக் காட்டினார்கள்.

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது . ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.
அல் குர்ஆன் 7:40

ஏக இறைவன் உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ஸிஜ்ஜீன் என்ற இடத்திற்கு எறியப்படும். பிறகு பின்வரும் வசனத்தை ஒதிக்காட்டினார்கள் .

அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலி-ருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்.
அல்குர்ஆன் 22:31


இவ்வாறு (கெட்டவர்களின் ஏடான) ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்படும் (ஹதீஸ் சுருக்கம்) நூல் : அஹ்மத் 17803)

மறுமையில் வரும் பதிவேடு:
மண்ணறை வாழ்க்கையை தொடர்ந்து மீண்டும் விசாரணைச் செய்யப்படும் நாளில் அனைவரும் இறைவன் முன்னிலையில் கொண்டுவரப்படுவார்கள். எந்தளவிற்கென்றால் ஆதம் (அலை) அவர்களிலி-ருந்து நூஹ் (அலை), ஸாலி-ஹ் (அலை), இப்ராஹிம் (அலை), இஸ்ஹாக் (அலை), யஃகூப் (அலை), யூசுஃப் (அலை), சுலைமான் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை உள்ள அனைத்து சமுதாயங்களும் இறைவன் முன் குழுமியிருப்பார்கள். இத்தனை சமுதாயங்களும் அவரவர் காலத்தில் என்னென்ன காரியங்கள் செய்தார்களோ அத்தனையும் அடங்கிய கிதாபை ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்படும். அதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் .
ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். (அல்குர்ஆன் 39:68)

பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 30 :68,69)

ஒவ்வொரு சமுதாயத்தையும் மண்டியிட்டவர்களாக நீர் காண்பீர்! ஒவ்வொரு சமுதாயமும் தனது (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படும். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கு இன்று கூலி கொடுக்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 45:28)

உண்மையை மட்டும் பேசும் உத்தம ஏடு:
நம்மால் பதியப்படும் எண்ணற்ற செய்திகளை நாமே அழித்துவிடலாம், மாற்றிவிடலாம். குற்றம் செய்தவனை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் பெரிய குற்றவாளி என்று பதியப்படுகின்றது. கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அந்த அறிக்கையில் சாதாரண குற்றச்செயல் செய்தவர் என்று மாற்றிவிடுகின்றனர். ஒருவருடைய சொத்தை மற்றொருவர் சர்வ சாதாரணமாக மாற்றி எழுதிவிடுகின்றனர். இப்படி பல்வேறு விஷயங்களுக்காக பதியப்படுகின்ற அனைத்தும் பொய்யாய் போவதைப் பார்க்கலாம். ஆனால் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர்கள் மூலம் எழுதப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையில் உண்மை மட்டுமே இருக்கும். அதில் உள்ளதை யாராலும் மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது. உள்ளது உள்ளபடி இருக்கும்.
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 23 :62)

இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம்.
(அல்குர்ஆன் 45:29)


பதிவேட்டை பார்த்து பயம் கொள்ளும் மனிதன்:
உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்).
அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 18 :48,49)

மனிதன் தனக்கு வழங்கப்பட்டதை பார்த்து ஏன் பயப்படுகிறான்?
அவன் இவ்வுலகில் நல்லவனாக வாழவில்லை. அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், கொலை, கொள்ளை, மது, சூது, விபச்சாரம், மோசடி, அவதூறு, புறம், கேலிகூத்துகள், கோள் இப்படி சிறிய பாவங்கள் முதல் பெரிய பாவங்கள் வரை அனைத்தையும் ஒன்று விடாமல் செய்தான். அதனால் தான் இந்த இழிநிலை. நாம் நம்மிடம் கொடுக்கப்படும் கிதாபை பார்த்து பயப்படக்கூடியவராக ஒருக்காலும் இருக்கக்கூடாது.

கழுத்தில் மாட்டப்படும் புத்தகம்:
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். (அல் குர்ஆன் 17:13)

செயல்களை கணக்கெடுக்க நீயே போதுமானவன் :
"உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று கூறப்படும்). அல் குர்ஆன் 17 :14

இடது கையில் வழங்கப்பட்டால் :
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான். அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.
அல் குர்ஆன் 69:25 -37

முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டால் :

முதுகுக்குப் பின் புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான். நரகிலும் கருகுவான். அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான். "தான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்'' என்று அவன் எண்ணினான்.அல்குர்ஆன் 84:10-14


வலது கையில் கொடுக்கப்பட்டால் :
யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார். அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார். (அல்குர்ஆன் 84: 7,8,9)

அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் "வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்'' எனக் கூறுவார்.

அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)
அல் குர்ஆன் 69 :18 -24
மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது. அல் குர்ஆன் (50:4)
"நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது" (என்றும் அவர்கள் கூறுகின்றனர்). (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது அல் குர்ஆன் (50 :3 ,4 ).
நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் உள்ளனர். அவர்கள் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (அல்குர்ஆன் 82:10-12)
எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம் இதனை செய்வோம். அல் குர்ஆன் (21:104)
ஒவ்வொரு மனிதனின் செயல்கள் அனைத்தும் கண்காணித்து எழுதப்படுகின்றது. அவ்வாறு எழுதப்பட்ட ஏடானது மறுமை வரை தொடர்கிறது. வலது கையில் கொடுக்கப்பட்டால் விசாரணை எளிதாகி சொர்க்கம் செல்கிறார். இடது கையில் கொடுக்கப்பட்டால் விசாரணை கடுமையாகி நரகம் செல்கிறார் .மறுமையில் இந்த இரண்டில் ஒன்றை கண்டிப்பாக அடைந்தே தீருவார். எனவே நாம் செய்யக்கூடிய ஒவ்வொன்றும் வலப்பக்கம் கொடுக்கக்கூடிய கிதாபில் பதியக்கூடிய வகையில் நல்அமல்களை அதிகமாக செய்து மறுமையின் வெற்றியைப் பெறுவோம்.
Read More »

யா அல்லாஹ் எங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்திடுவாயாக!




(ஒரு நீளமான ஹதீதில்……


நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை முடித்த பின், அங்கிருந்த நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழுமிடத்தில் ஏதோ ஒரு பொருளை பிடித்தது போன்று நாங்கள் பார்த்தோம் பின்பு (அவ்விடத்திலிருந்து) பின் வந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றார்கள்,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் சுவர்க்கத்தை பார்த்தேன், (அங்கிருந்து) திராட்சைப் பழக்குலையை பிடித்தேன், அதை நான் எடுத்திருந்தால் இவ்வுலகம் இருக்கும் வரை நீங்கள் அதை உண்ணக்கூடியவர்களாக இருந்திருப்பீர்கள், இன்னும் நரகத்தையும் காட்டப்பட்டேன், அன்றைய நாளின் அவலத்தைப் போல் நான் என்றும் பார்த்ததில்லை,

அதில் அதிகம் பெண்கள் இருப்பதைக் கண்டேன், அல்லாஹ்வின் தூதரே! (அது) எதனால் என்றார்கள், அவர்கள் நிராகரிப்பதின் காரணமாக என்றார்கள், அல்லாஹ்வையா நிராகரிக்கின்றார்கள்? என கேட்கப்பட்டது, கணவனை நிராகரிக்கின்றார்கள், அவர்களுக்கு செய்யப்படும் உபகாரத்தை நிராகரிக்கின்றார்கள், அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி)


சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை ஏழைகளாக பார்த்தேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை பெண்களாக பார்த்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி)

நோன்புப் பெருநாள் அல்லது ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கு வெளியாகிச் சென்றார்கள், (தொழுகையை முடித்துவிட்டு) திரும்பி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள். தருமம் செய்யும்படி அவர்களுக்கு ஏவினார்கள், கூறினார்கள்,

மனிதர்களே! தர்மம் செய்யுங்கள், பெண்களின் பக்கமும் சென்றார்கள்,

பெண்கள் கூட்டமே! தர்மம் செய்யுங்கள், உங்களை நரகவாதிகளில் அதிகமாகவர்களாக நிச்சசயமாக நான் பார்த்தேன் என்றார்கள், எதனால் அது அல்லாஹ்வின் தூதரே! என (அங்கிருந்த) பெண்கள் கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதிகம் சாபம் இடுகின்றீர்கள், கணவர்மாரின் உபகாரத்தை மறுக்கின்றீர்கள், அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுள்ள உங்களைவிட மிகவும் அறிவுள்ள ஒரு ஆணிண் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக வேறு யாரையும் நான் பார்க்கவில்லை என்றார்கள்….

(புகாரி)
Read More »

செல்போன் ரிப்பேர் செய்ய வந்த கிருஸ்தவ மத போதகருக்கு திருக்குரான் அன்பளிப்பு !


செல்போன் ரிப்பேர் செய்ய வந்த கிருஸ்தவ போதகருக்கு செல்போன் கடையில் தவா செய்யப்பட்டது .மதுரவயல் இ .அப்துல் ஹமீது அவர்கள்


‘மர்யமுடைய மகன் ஈஸாவே,

“அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர்  “நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான்
சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். (அல் குஆன் 5:116)

“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும்)” (அல் குஆன் 5:117) 
என்ற வசனத்தை சுட்டிக்காட்டி இயேசு அவர்கள் நீங்கள் வணக்கியதை தெரியாது என்று மறுமையில் இறைவன் முன் மறுத்து விடுவார்கள் என்ற போது அவர் சிந்திக்க ஆரம்பித்தார் .

உடனே அவரை மதுரவயல் கிளைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

                        அங்கு இஸ்மாயில் அவர்கள் கிருஸ்துவ மதத்தின் அபத்தமான போதனைகளையும்,இஸ்லாத்தின் கேள்விகளையும் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியாமல் இஸ்லாம் சொல்லும் செய்தி உண்மைதான்  இஸ்லாமிய கருத்துக்களை தெரிந்து கொள்ள திருக்குரானை படிக்க வேண்டும் என்றதும்  திருக்குரானை நாங்கள் அன்பளிப்பாகவே தருகிறோம் என்று திருக்குரான் தமிழாக்கமும் ,ஏசு இறைமகனா? என்ற புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் !

"மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?'' என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார். "நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்) அல்குர்ஆன் 5:116-118

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/egathuvam/2012-ega/ega_jun_2012/
Copyright © www.onlinepj.com
"மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?'' என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார். "நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்) அல்குர்ஆன் 5:116-118

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/egathuvam/2012-ega/ega_jun_2012/
Copyright © www.onlinepj.com
Read More »

உலக முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய "ஷரீஅத்" ஆட்சி முறையையே விரும்புகின்றனர் : அமெரிக்க சர்வே முடிவு!

மக்களின் வாழ்க்கையில் மதங்களின் தாக்கம் குறித்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் "Pew Forum on Religion & Public Life" என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், உலகில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர்,
இஸ்லாமிய ஷரீஅத் சட்ட முறைப்படியான ஆட்சியை விரும்புகின்றனர், என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலிருந்து செயல்படும் இந்த "Pew Forum" அமைப்பு, உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களிடம் பல்வேறு தலைப்புக்களின் கீழ் கருத்துக்களை கேட்டு எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.

(இந்த சர்வே முடிவுகள், ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய விரோத விஷமம் கலந்து இருக்கும், என்ற முன்ஜாக்கிரதை உணர்வோடு இதை எடுத்துக்கொள்வதே சரியாக இருக்கும் - ஜாகிர் ஹுசைன்)

http://www.pewforum.org/Topics/Religious-Affiliation/Muslim/

ஆசிய கண்டத்தில் வசிக்கும் நான்கில் 3 பகுதி முஸ்லிம்கள், விவாகரத்து போன்ற குடும்ப உறவுகள் விஷயங்களிலும், குடும்ப சொத்துக்களின் வாரிசுரிமை போன்ற சட்டத்திலும், இஸ்லாமிய ஷரீஅத் முறைப்படியான தீர்வுகளை விரும்புகின்றனர்.

திருடுபவர் கையை வெட்டுவது, மரண தண்டனை உள்ளிட்ட சிலவற்றை, கிழக்காசிய முஸ்லிம்களில் சிலர் விரும்பவில்லை எனவும், இதனால் முஸ்லிமல்லாத நாடுகள் மத்தியில், இஸ்லாம் தள்ளி நிற்பதாக கூறுகின்றனர்.

அதே நேரம், இந்த சட்டங்களை முஸ்லிமல்லாத நாடுகளிலும் அமல்படுத்தினால், குற்றங்கள் குறையும் என ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.

இது விஷயத்தில் எல்லோரது கருத்தும் ஒன்றாக இல்லை, இது போன்ற தண்டனை சட்டங்களை முஸ்லிமல்லாதார் மீது செயல்படுத்தக் கூடாது, என்று வங்கதேசத்தில் 97% மக்களும், பாகிஸ்தானில் 96% பேரும், எகிப்தில் 77% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்கொலைப்படை தாக்குதல் உள்ளிட்ட போர் முறைகளை அனைத்து முஸ்லிம்களும் ஒரே குரலில் எதிர்ப்பதாக கூறும் சர்வே, அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளை எதிர்கொள்ள வேறு வழியில்லை என, பாலஸ்தீனத்தில் 40% மக்களும், ஆப்கானில் உள்ள 39% மக்களும், எகிப்தின் 29% மக்களும், இதை ஆதரிக்கின்றனர்.

எனினும், ஒட்டுமொத்தமாக 80% இஸ்லாமியர்கள் இதை சட்ட விரோதம் என்கின்றனர்.


இஸ்லாமிய ஆட்சி முறையை ஏற்பதில் ஒத்தக் கருத்தை வெளியிட்டுள்ள முஸ்லிம்கள், அதில் ஜனநாயக நடைமுறை பின்பற்றவும் வலியுறுத்துகின்றனர்.

54% ஈராக் மக்களும், 81% லெபனான் மக்களும், 70% வங்கதேசத்தவரும், ஜனநாயக ஆட்சி முறையை விரும்புகின்றனர்.

கணவர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதை, குறைந்த பட்சமாக 76% லெபனான் பெண்களும், அதிகபட்சமாக இந்தோனேஷியாவில் 96% பெண்களும் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
Read More »

நான் எப்படி முஸ்லிமானேன்? : டச் (Dutch) நாடாளுமன்ற உறுப்பினர் "அர்னோட் வேன் டோர்ன்" மனம் திறந்த பேட்டி!


"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான், முஸ்லிம் ஆகிவிட்டேன் என்பதை எங்கள் கட்சியினர் நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும்.


நான், கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனதிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை ஆராய்ந்த பின்னரே, இஸ்லாத்தை ஏற்றேன் என்கிறார், நெதர்லாந்தின் "Party for Freedom" எனும் வலதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் 46 வயதான "அர்னோட் வேன் டோர்ன்"


"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்கின்றனர்.

எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் மற்றவர்கள் சொல்வதை கண்மூடிக் கொண்டு நம்புபவன் நான் அல்ல.

சிலர் பிறந்த மதத்துக்கு நான் துரோகம் செய்து விட்டதாக கூறுகின்றனர். பலர் நான் எடுத்த இந்த முடிவு மிகச் சரியானது என்கின்றனர். டிவிட்டரிலும் பலர் எனக்கு ஆதரவு தந்துள்ளனர்.'

மனதை விசாலமாக்கி, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன்.

நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஃபித்னா" திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இப்போது நினைத்தால் கூட, என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை.

நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.

இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.

"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.

"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு,

"இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன்.

இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை.

இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின"

"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன்.

அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.

எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.

"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன்.

இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன்.

இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்றார், வேன் டோர்ன்.

Read More »

உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை-1 போன்- 91 044 25215226 மின்னஞ்சல்- tntjho@gmail.com


அஸ்ஸலாமு அலைக்கும்

சில நாட்களாக ஜீதமிழ் தொலைகாட்சியின் சொல்வதெல்லாம் உண்மை என்ற மானம் கேட்ட நிகழ்ச்சியில் இஸ்லாமிய மக்கள் தங்களது குடும்ப பிரச்சனைகள் குறித்து பஞ்சாயத்து செய்யவதற்கு செல்கிறார்கள்.


அதுவும் எப்படி ஆட்களை இந்த மானம் கேட்ட நிகழ்ச்சியில் தேர்ந்தேடுக்கிறார்கள் பாருங்கள் இஸ்லாமிய பெண்ணும் அந்நிய ஆணும் திருமணம் செய்யாமல் பல வருடங்களாக காதலித்து ஏமாற்றுதல் மற்றும் இஸ்லாமிய பெண்ணும் மாற்று மதத்தினர் ஒருவரும் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுவிட்டு தற்பொழுது அந்த இஸ்லாமிய பெண் இவரை வேண்டாம் என்று சொல்லுவது போன்றும்.

இஸ்லாமிய பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்கு பொருத்தம் இல்லாதவர்கள் போன்று ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். இந்த ஜீதமிழ் தொல்லைக்காட்சி.

தயவு செய்து இஸ்லாமிய மக்கள் யாரும் தங்கள் விட்டு பிரச்சனைகளை இந்த நாய்கள் நடத்தும் ஜீதமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு சென்று சொல்ல வேண்டாம்.

அல்லாஹ்வினுடைய தீனுல் இஸ்லாம் உலக வாழ்கையில் மனிதன் சந்திக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை சொல்லியிருக்கின்றது. அது தனி மனிதருகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், சமுதாய கூட்டு வாழ்கையில் உண்டாகும் பிரச்சனையாக இருந்தாலும் எந்த ஒன்றிற்கும் தீர்வு சொல்லாமல் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை பற்றி அறிந்துகொள்ளாமல் தங்களுடைய சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் வழக்கு, நீதிமன்றம் என்று அலைவதினால் தங்களுடைய பணம், நேரம், அமல்கள், மானம், நிம்மதி போன்ற அனைத்தையும் விரயமாக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாத்து அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை தங்களுடைய வாழ்கை நெறியாக ஏற்று செயல் பட வேண்டும்

அதையும் மீறி உங்களால் மிண்டு வர முடியாதா பிரச்சனைகள் இருப்பின். தயவு செய்து. இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஷரியத் கோர்டை அணுகவும். அது மட்டும் தான் சிறந்த வழி. .
திரும்ப சொல்கிறேன் தயவு செய்து இஸ்லாமிய மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டாம்.
உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பின் தயவு செய்து  தொடர்பு கொள்ளுங்கள்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
போன்- 91 044 25215226
மின்னஞ்சல்- tntjho@gmail.com
Read More »

இங்கிலாந்தில் 1 லட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக "THE SUN" பத்திரிகை தகவல்!

இன்றைய (22/04/13) "THE SUN" பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில், இங்கிலாந்து நாட்டில் இஸ்லாம் வேகமாக பரவி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக புள்ளி விவரங்களுடன், செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது 5,000 நபர்கள் இஸ்லாத்தை ஏற்று வருவதாக "THE SUN" கூறுகிறது.

http://www.thesun.co.uk/sol/homepage/woman/4769410/Meet-four-women-who-have-converted-to-Islam.html

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் "வெள்ளையர்" என்றும் அதிலும் 75% பெண்கள் எனவும் கூறுகிறது, அந்த செய்தி.

2011 ம் ஆண்டில் மட்டும் 5,200 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.
Read More »

சுவீடன் நாட்டில் வெள்ளிக்கிழமையன்று ஒலிபெருக்கியில் ஒலித்த பாங்கொலி!

சுவீடன் நாட்டின் "ஸ்டாக் ஹோம்" அருகில் அமைந்துள்ள "ஃபிட்ஜா" (Fittja) பள்ளிவாசலில் நேற்று முன்தினம்
வெள்ளிக்கிழமையன்று ஒலிபெருக்கியில் பாங்கு சொல்ல அனுமதிக்கப்பட்டது.


இந்த பள்ளிவாசல், சுவீடனில் உள்ள "பாட்கிர்கா" (Botkyrka) முனிசிபாலிடி எல்லையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலாகும்.

நீண்ட கால கோரிக்கைக்குப்பின் வியாழனன்று (10/04) கூடிய "பாட்கிர்கா" நகரமன்ற கூட்டத்தில் இதற்கான அனுமதியளிக்கப்பட்டது.

இதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பகல் 12 முதல் 1 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் 3 முதல் 5 நிமிட நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் பாங்கு சொல்ல அனுமதி கிடைத்துள்ளது.

இந்த அனுமதி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுவீடன் மக்கள், நேற்று முன்தினம் வெள்ளியன்று, பாங்கொலி கேட்டு அகமகிழ்ந்தனர்.

கடந்த 2007ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலை சுற்றி சுமார் 1,500 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சுவீடன் இஸ்லாமிக் அசோசியேஷன் தலைவர் இஸ்மாயீல் இத்தகவலை வெளியிட்டார்.
Read More »

Back to Home Back to Top tntjmvl