நாட்டில் நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்களுக்கு இந்துத்வா அமைப்புகளின் பயிற்சி முகாம்களே காரணம்-உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே

ஜெய்ப்பூர்: காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக, பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஷிண்டே,"ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.
சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு,மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணையில்,வலதுசாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது" என்றார்.
இதனிடையே, இந்து தீவிரவாதிகளான பா.ஜனதாவும், மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பல்டி அடித்து . இந்து தீவிரவாதம் என தாம் கூறவில்லை என்றும், காவித் தீவிரவாதம் என்றே தாம் குறிப்பிட்டதாகவும் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

Back to Home Back to Top tntjmvl